மாற்றம் உறுதி! இன்று முதல் புதிய வரலாறு தொடக்கம்...! - ஆதவ் அர்ஜுனா அதிரடி!
Change certain New history begins today Adhav Arjuna action
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் தீவிரமான அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"இன்று காலையின் முதல் ஒளியுடன் தமிழ்நாட்டில் எழும் மாற்றத்திற்கான புயல், நாளெங்கும் வெட்கமறக் கொந்தளிக்கும் புயலாக வளரும்...!
மாலை 7 மணியளவில் ‘தேர்தல் முடிவுகள்’ எனும் அந்தப் பெருவெள்ளம் கரையை எட்டும் தருணத்தில், அதன் சீற்றத்தில் பல தசாப்தங்களாக வேரூன்றி ஆதிக்கம் செலுத்திய பழைய ஆட்சிக் கட்டமைப்புகள், மக்கள் ஆற்றலின் பேரலையால் வேரோடு சிதறடிக்கப்படும்!
மரபுரிமை ஆட்சி முறைக்கு முடிவுக் கட்டுப்படும்! பிறப்பின் அடிப்படையில் இனி யாரும் முதல்வர் பதவியை அடைய முடியாத புதிய காலம் உதயமாகும்!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் நாள் இன்று தொடக்கம் பெறுகிறது!”.இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Change certain New history begins today Adhav Arjuna action