ஆரம்பமே அதிரடி! பெரம்பூரில் 'தளபதி' ஆதிக்கம்...! - தபால் வாக்குகளில் விஜய் முன்னிலை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சீரிய முறையில் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பரபரப்பான சூழலில் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

வழக்கப்படி முதலில் தபால் வாக்குகள் திறந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன; அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிந்த வாக்குகள் கட்டம்கட்டமாக எண்ணப்பட உள்ளன.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலைப் பிடித்துள்ளது. அங்கு விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் திகழ்கிறார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆர்.டி. சேகர் 25 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

அதேபோல், திரு.வி.க.நகர் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். பல்லவி 10 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action begins Thalapathy dominates Perambur Vijay leads postal votes


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->