‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்.. எடிட்டர் பிரதீப் ராகவிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி.. என்ன சொன்னாரு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் இந்த படம், ஆரம்பத்தில் ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் தாமதமானதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தியேட்டருக்கு வருவதற்கு முன்பே முழுப் படம் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்சார் சான்றிதழ் பெறாத நிலையில் படம் வெளியேறியது திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.

படம் லீக் ஆனதையடுத்து, முதலில் சந்தேகத்தின் பார்வை படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது திரும்பியது. கசிந்த பிரதியில் இருந்த வாட்டர் மார்க் காரணமாக பலரும் அவர்மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர். ஆனால் பின்னர் எடிட்டர்கள் சங்கம், இந்த விவகாரத்தில் பிரதீப்புக்கு நேரடி தொடர்பில்லை என தெளிவுபடுத்தியது.

அதே சமயம், படத்தை எடிட்டிங் பணிக்காக வெளியக ஸ்டூடியோவிற்கு அனுப்பியபோது கசிந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், எடிட்டர்கள் சங்க விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத ஒருவரை பணியில் இணைத்தது அலட்சியமாக பார்க்கப்பட்டதால், பிரதீப் ராகவுக்கு தற்காலிக இடைநீக்கம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, பிரதீப் ராகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பிரதீப் ராகவ் மிகவும் திறமையானவர். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நேற்று இரவு கூட அவருடன் பேசினேன். ‘நாங்கள் எல்லோரும் உன்னுடன் இருக்கிறோம்’ என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜியின் இந்த ஆதரவு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. “எல்லோரும் சந்தேகித்த நேரத்தில் தோள்கொடுத்தவர் பாலாஜி” என சமூக வலைதளங்களில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் மறுதணிக்கைக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RJ Balaji spoke to editor Pradeep Ragha about the Democratic League issue Do you know what he said


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->