நடிகை பிரத்யுஷா தற்கொலை வழக்கு: காதலனுக்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை; 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரதியுஷா. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார். 

முக்கியமாக பிரபுவுடன் 'சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் 'தவசி', ராமராஜனுடன் 'பொன்னான நேரம்', பாரதிராஜாவின் 'கடல்பூக்கள்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.  சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெட்டி  மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைத்த நிலையில், பிரத்யுஷா பரிதாபமாக உயிரிழந்தார். பிரத்யுஷா தனது 22 வது வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரத்யுஷாவின் காதலன் சித்தார்த்த ரெட்டிக்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 02 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பினால், விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் கடந்த, 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். சுமார் 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த  நிலையில், சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, 04 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு குறைப்பட்டமாக 02 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு,05 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court verdict in actress Pratyusha suicide case after 23 years


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->