சென்னை சேப்பாக்கத்தில் பிக் பாஷ் டி20 லீக் தொடர்: பேச்சுவார்த்தை நடத்திய ஆஸ்திரேலியா..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர், உலகளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் முக்கியமான ஒன்று. இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் தொடருக்குப் பிறகு மிகப்பெரிய லீக்காக இந்த  பிக் பாஷ் டி20 லீக் தொடராக விளங்குகிறது.

இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. கடந்த 2011-இல் இருந்து பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமுள்ள அதிகமான ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய லாபகரமான சந்தையை கொண்ட நாடக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், இந்த  பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஒரு போட்டியை இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை விரும்புகிறது. அதுவும் அந்த போட்டியை நம்ம சென்னையில் நடத்த விரும்புவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக  அச்சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து கிரிக்கெட்டின் தலைமை பிசிசிஐ சம்மதம் தெரிவித்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சந்தையை கொண்ட இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த பிக் பாஷ் லீக்கில் உள்ள 08 அணிகளில் 02 அணியின் உரிமையாளர்கள் அணியை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதன்படி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்து்ளளது. இந்த அணி 06 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2025-26 சீசனிலும் இந்த அணிதான் சாம்பியன் வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia in talks to host Big Bash Cricket Series in Chennai


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->