பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி நம்பிக்கை மோசடி; நடிகை அமீஷா படேலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் ..! - Seithipunal
Seithipunal


திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு நடனமாட நடிகை அமீஷா படேலுக்கு 11 லட்சம் முதல் 14.5 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த பவன் வர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் புகார் அளித்திருந்தார். 

குறித்த புகார் தொடர்பாக நடந்த விசாரணையில், அமீஷா படேல் மும்பையிலிருந்து டெல்லி வரை வந்ததாகவும், ஆனால், அவரது குழுவினர் கூடுதலாக 02 லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மறுத்ததால் அமீஷா படேல் பாதியிலேயே திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன், தான் வாங்கிய பணத்தை திருப்பித் தர வழங்கிய 4.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமீஷா படேல் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனாலும், இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் அமீஷா படேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மொராதாபாத் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், வரும் மார்ச் 27-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrest warrant issued for actress Ameesha Patel for cheating and breach of trust by accepting money


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->