வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு இந்து; யார் இந்த நிதாய் ராய் சவுத்ரி..? - Seithipunal
Seithipunal


கடந்த 12-ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிஎன்பி கூட்டணி கட்சி அமோக வெற்றிப் பெற்று அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். 

தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பெண்கள் பிரதமராக இருந்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ரஹ்மானைத் தவிர, 25 அமைச்சர்களும் 24 மாநில அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில், 25 அமைச்சர்களில் 17 பேர் புதிய முகங்கள், அனைத்து மாநில அமைச்சர்களும் முதல்முறையாக இந்தப் பதவியை வகிக்கின்றனர். பிரதமர் ரஹ்மான் முதல்முறையாக அமைச்சரவை உறுப்பினராகவும் உள்ளார்.

அதன்படி, இந்த அமைச்சரவையில், வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவராக நிதாய் ராய் சவுத்ரி என்ற .ஒரேயொரு இந்துவுக்கும் இடம் கிடைத்துள்ளது. 

நிதாய் ராய் சவுத்ரி

1949-ஆம் ஆண்டு மகுரா மாவட்டத்தில் பிறந்தவர், ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்துள்ளார். பின்னர் டாக்கா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார்.அங்கு பயின்றபோதே அரசியலிலும் கால் பதித்துள்ளார். அதனையடுத்து கடந்த 1988-ஆம் ஆண்டு, மகுரா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பின்னர், 1990 முதல் ஹுசைன் முகமது எர்ஷாத் அரசாங்கத்தில் 03 மாதங்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மீண்டும், எர்ஷாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, நிதாய் ராய் சவுத்ரி பிஎன்பியில் சேர்ந்து அதன் துணைத் தலைவரானார். அன்று முதல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

அத்தோடு, ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சியையும் குற்றம்சாட்டி வந்தார். ஹசீனா நீதித்துறையை சமரசம் செய்து அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஒரு பாசிச ஆட்சிநடத்தியதாகிவரும் குற்றம் சாட்டினார்.

மேலும், பிஎன்பி உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் ஒடுக்குமுறை என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். அதனை தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்த நிலையில், இன்று தாரிக் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். நிதாய் ராயைத் தவிர, தாரிக் ரஹ்மானின் அமைச்சகத்தில் ஒரு புத்த சக்மா தலைவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nitai Roy Chowdhury is the only Hindu in Tariq Rahmans cabinet in Bangladesh


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->