முதலும் ஆறுதலும்; ஐரிசின் அபார ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 07 விக்கெட்டுகளில் வீழ்த்திய நேபாளம் அணி..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் மோதின. ஆட்டத்தில் டாஸ் வென்ற நேபாளம் அணி, முதலில், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது.

அணியின் தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் மற்றும்  ஜார்ஜ் முன்சே நிதானமாக ஆடினர். இதில், முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து அபாரமாக ஆடிய  மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.  இறுதியாக 20 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 03 விக்கெட்டும், நந்தன் யாதவ் 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நேபாளம் களம் இறங்கியது. அணியின், ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 16 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

13.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்கொட்லாந்து பக்கம் வெற்றி இருந்த நிலையில், அடுத்து வந்த திபேந்திர சிங் ஐரீ உடன் குல்சன் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நேபாளம் அணி, 19.2 ஓவரில் 03 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால், 07 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வெற்றி பெற்றது.

இதில், ஐரீ 23 பந்தில் 50 ரன்களும், குல்சன் ஜா 17 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் 2014 க்கு பிறகு  நேபாளம் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal defeated Scotland by 7 wickets with Iriss brilliant performance


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->