மணலியில் அனுமதியின்றி செயல்பட்ட இரும்பு குடோனுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


சென்னை மணலி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய இரும்பு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மணலி, மண்டலம் 19-வது வார்டு, மாத்தூர் பகுதியில் ஏராளமான பழைய இரும்பு பொருட்களை கையாளும் தனியார் குடோன்கள் உள்ளது. 

இதில் சில இரும்பு குடோன்கள் சென்னை மாநகராட்சியின் அனுமதி இல்லாமல்இயங்கியுள்ளது. இது குறித்து வார்டு கவுன்சிலர் காசிநாதன் மணலி மண்டல குழு கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

குறித்த புகாரின் அடிப்படையில், மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில், உதவி பொறியாளர் ஸ்ரீதர், வருவாய் பிரிவு அதிகாரிகள் மாத்தூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, மாசிலாமணி நகரில் பழைய லாரிகளை உடைத்து இரும்பு பொருட்களாக மாற்றும் மையமாக செயல்பட்டு வந்த தனியார் குடோன் அனுமதி இல்லாமல் இயங்குவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குடோனை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். 

அத்துடன், அனுமதி இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள், குடோன்கள் குறித்து விரிவான ஆய்வு செய்து அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An iron warehouse operating without permission in Manali has been sealed


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->