'தென்னிந்திய நடிகை மற்றும் பெண் என்பதால் பாலிவுட்டில் இழிவாக நடத்தப்பட்டேன்'; நடிகை ரெஜினா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட  நடிகை ரெஜினா கசாண்ட்ரா, கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர். தற்போது தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, இந்தி படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் தனக்கு பாகுபாடு காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களாலும், பாலிவுட்டில் பலர் தன்னை இழிவாக நடத்தியதாகவும், என்னை இழிவாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  குறிப்பிட்ட முறையில் தான் அங்கு கீழ்த்தரமாக நடத்தப்பட்டேன் என்பதை அங்கிருக்கும் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். என்னால் அதை உணர முடிந்தது என்றும், இதனால் இந்தியில் நடிக்க தனக்கு  தயக்கம் இருந்ததாகவும், ஆனால், இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடக்காது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நான் தென்னிந்திய நடிகையாகா இருந்தாலும்,  மற்ற தென்னிந்திய நடிகைகளை ஒப்பிடும்போது, தான் சிறப்பாகவே இந்தி பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தன்னால், இந்தியில் பேச முடியும், எழுத முடியும், படிக்க முடியும். குறிப்பிட்ட காலத்துக்குள் என் படங்களின் இந்தி டப்பிங்கை என் சொந்த குரலில் பேசி கொடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நான் சரியாக செய்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் தென்னிந்திய நடிகை என்பதால் மட்டுமல்ல, பெண் என்பதாலும் இழிவாக நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். திரையுலகில் பெண் என்பதால் எளிதில் அவர்களை ஸ்டீரியோடைப் செய்துவிட முடியும் என்றும்,  இது ஒரு காட்சி வழி ஊடகம். நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்பாததால், என்னால் நான் விரும்பும் படங்களில் நடிப்பது சிரமமாக உள்ளது என்று நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Regina opens up about being treated poorly in Bollywood for being a South Indian actress and a woman


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->