"எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது"; விஜய்யை மறைமுகமாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.!
MGR Not everyone who mentions the name MGR can become MGR Edappadi Palaniswami indirectly criticized Vijay
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225- வது நாளை எட்டியுள்ளது.
சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் MGR-இன் இதயக்கனி படத்தின் 225-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் சேர்ந்து படம் பார்த்தனர்.
அதன் பின்பு பேசிய இபிஎஸ் கூறியதாவது: "எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது" என்று தவெக விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், எம்.ஜி.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அண்மையில் அடிக்கடி பேசி வருக்கிறார். இந்நிலையில், இதயக்கனி பட வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
MGR Not everyone who mentions the name MGR can become MGR Edappadi Palaniswami indirectly criticized Vijay