தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடியை சந்தித்த காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார்; கேரளா அரசியலில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், கொலை வழக்கு ஒன்றில், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார். அவரை விடுவிக்க மத்திய  அரசுடன் இணைந்து காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கேரளாவில் சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக ஜாமியா மர்கஸ் மற்றும் சமஸ்தா ஆகிய அமைப்புகள் பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றன. குறித்த அமைப்புகளின் கல்வி சேவைகளை பிரதமர் மோடி ஏற்கெனவே பாராட்டியுள்ளார்.

இது நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றுவதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய கிராண்ட் முப்தியும், சமஸ்தா கேரள ஜமியத்துல் உலமா அமைப்பின் பொதுச்செயலாளருமான காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார், நேற்று டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்னிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வக்ஃப் வாரிய விவகாரங்கள் மற்றும் மவுலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைகளை மீண்டும் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

கேரள சட்டமன்ற தேர்தல் நேரத்தில், முஸ்லீம் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளமை கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kandapuram AP Abubakar Musliyar meets Prime Minister Modi as elections approach


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->