"ஸ்டாலினை அங்கிள் என அழைத்ததில் தவறு இல்லை" – விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் நடிகர் விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினை "அங்கிள்" என குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியது. திமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் விமர்சித்தனர்.இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அனுபவமும் கிடையாது. ஆனால் விஜய் பேசியது தவறாக எனக்குப் படவில்லை. விஜய் நிஜமாகவே நேரில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங் அங்கிள்.. எப்படி இருக்கீங்க அங்கிள்’ என்று தான் சொல்வார். அதைத்தான் பப்ளிக் மேடையிலும் பேசியுள்ளார். அதை தவறாக எடுத்துக்கொள்ள தேவையில்லை” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:“நான் ஸ்டாலின் அவர்களை நிறைய முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய வீட்டிற்கும் சென்றிருக்கிறேன். அப்போது எப்போதும் ‘வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க’ என்பதையே சொல்வேன். அங்கிள் என்பது தப்பான வார்த்தை அல்ல. விஜய் சற்றே காமர்ஷலாக ரசிகர்களை கவரும் விதமாக பேசியிருக்கலாம். அதை பிரச்சனையாக்க வேண்டிய அவசியமில்லை. நானும் அருகிலுள்ளவரை ‘பாபு அங்கிள்’ என்று சொல்வேன். அதில் தவறு எதுவும் இல்லை. தமிழில் ‘மாமா’ என்று சொன்னால்கூட தவறாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை” என்றார்.

இதன்மூலம், விஜய் ஸ்டாலினை "அங்கிள்" என அழைத்தது குறை சொல்லத்தக்க விஷயமல்ல என்பதை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is nothing wrong in calling Stalin uncle Director KS Ravikumar comes out in support of Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->