திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாக்கடைக்குள் போய்விட்டன - அண்ணாமலை காட்டம்.!!
annamalai speech about ungaludan stalin scheme petitions float vaigai river
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி ஆற்றுப்பகுதிக்கு வந்த போலீசார், மனுக்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் வீசப்பட்டுள்ள இந்த மனுக்களுக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆற்றில் மனுக்கள் மிதக்கப்பட்டது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- “ திட்டங்களுக்கு கவர்ச்சியான பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் இந்த பேட்ச் ஒர்க் மாடல் திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” என்று அழைக்கப்படும் திட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் மிதக்கும் குறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனுக்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், திமுகவின் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதிகள் சாக்கடைக்குள் போய்விட்டன. இன்று, மக்களின் குறைகள் கூட குப்பைகளைப் போல வீசப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.
English Summary
annamalai speech about ungaludan stalin scheme petitions float vaigai river