செய்தித்தாள்களில் கசிந்த விவகாரம்.. மின் துறையை அலறவிட்ட பொதுநல அமைப்புகள்!
The matter leaked in the newspapers Public welfare organizations have shaken the electricity sector
மக்களுக்கு விரோதமான செயலில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அரசு எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது..
புதுச்சேரி மின்துறையை தனியார் மையம் ஆக்குவதை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது... பின்பு இது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளதாக எனவும் செய்திகள் வந்தது இதனைத் தொடர்ந்து போராட்டங்கள் கைவிடப்பட்டது... மேலும்... 29.08.2025... இன்று செய்தித்தாள்களில் புதுச்சேரி மின்துறை தனியார் மையம் ஆக்கப்பட்டு பங்கு சந்தையில் அதானி எலக்ட்ரிசிட்டி புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
இதனை அறிந்த புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் புதுச்சேரி பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் லோகு ஐயப்பன்,அழகர்,பஷீர்,சுவாமிநாதன் உள்ளிட்ட மற்றும் பல பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் உடனடியாக மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இதற்கு என்ன பதில் என கேள்விகளை எழுப்பினர்...
மின் துறை தலைமை பொறியாளர் அவர்கள் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது... மேலும் இது பற்றி அமைச்சர் மற்றும் தலைமை செயலர்,துறை செயலர்களுக்கு தான் இது பற்றி தெரியும் எனவும் நீங்கள் செய்தித்தாளில் படித்தது போல தான் நாங்களும் செய்தலில் படித்தோம் என பதில் அளித்தனர்... மக்களுக்கு விரோதமான செயலில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அரசு எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது..
English Summary
The matter leaked in the newspapers Public welfare organizations have shaken the electricity sector