மன்னிப்பு கேட்க வேண்டும் -ராகுல் காந்தியை சாடிய அமித்ஷா! - Seithipunal
Seithipunal


“ராகுல் காந்தியிடம் சிறிதளவு நல்லெண்ணம் மீதமிருந்தால், அவர் மோடியிடமும், அவரது மறைந்த தாயாரிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிர்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன.நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து,  நடைபெற்று வரும் யாத்திரையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ராகுலுடன் இணைந்து பங்கேற்கின்றனர். 

இதற்கிடையே, ராகுலின் இந்தப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் மேடையில் இருக்கும் சில நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசுவது பதிவாகியுள்ளது.இது தொடர்பான சில வீடியோ பதிவுகள் பாஜகவின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. , 

இதற்கு முன்பு இவ்வளவு தரம்தாழ்ந்த வார்த்தைகள் அரசியல் களம் கண்டது இல்லை. ராகுல் நடத்தும் இந்தப் பயணம் அவதூறு பரப்புவதில் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பிகார் மக்கள் ராகுலையும் அவருடன் பயணிப்பவர்களையும் மன்னிக்க மாட்டார்கள்’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் தாயார் ஹீராபென் மோடி குறித்து அவதூறு பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது: –

“ராகுல் காந்தியிடம் சிறிதளவு நல்லெண்ணம் மீதமிருந்தால், அவர் மோடியிடமும், அவரது மறைந்த தாயாரிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். 

மோடியின் தாயார் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்க்கை வாழ்ந்து,  அத்தகைய வாழ்க்கைக்கு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இந்திய மக்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. அரசியல் வாழ்க்கையில் இதை விட பெரிய வீழ்ச்சி எதுவும் இருக்க முடியாது, அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amid Shah criticized Rahul Gandhi should seek forgiveness


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->