சத்தமே இல்லாமல் நடந்த நடிகர் விஷாலின் திருமண நிச்சயதார்த்தம்.!!
actor vishal gets engaged sai dhanshika
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும்.
இதற்கிடையே நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஷால் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
விஷாலின் இந்த நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வெளியில் வராமல் இருந்த நிலையில் இன்று நடைபெற்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actor vishal gets engaged sai dhanshika