மைதானத்தை மூடிய பனிமூட்டம்; இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 04-வது டி20 போட்டி ரத்து...!
The 4th T20 match between India and South Africa has been cancelled
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை லக்னோவில் நடைபெறுவதாக இருந்த இரு அணிகளுக்குமிடையிலான 04-வது போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்தாகியுள்ளது. இரு அணி வீரர்களும் ஆட்டத்துக்கு தயாராகி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், நடுவர்கள் பல்வேறு முறை ஆட்டத்தை நடத்தும் சாத்தியம் உள்ளதா என கள ஆய்வு செய்தனர். பின்னர் இரவு 09.30 மணி அளவில் பனிமூட்டம் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் வரும் வெள்ளிக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The 4th T20 match between India and South Africa has been cancelled