பொதுக்கழிப்பறையின் அவலம்..கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்!
The state of the public toilet The municipal administration that does not take notice
ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் பொதுக்கழிப்பறை அருகே கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடிமழை காலங்களில் கொசு உற்பத்தியுடன், நோய்த்தொற்று ஏற்படும் அவலத்தில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து 2023 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் பிரவுன் ஹவுஸ் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடி மாசு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் அங்குள்ள பொது கழிப்பறையில் கதவுகள் துரு அரிக்கப்பட்டு, குழாய்கள் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்விளக்குகள் இருந்தும் பயனற்று உள்ளது. குடிநீர் நீர்த்தேக்க தொட்டி விரிசல் ஏற்பட்டு பாசி கரையுடன் அபாயகரமாக காணப்படுகிறது. தினமும் முறையாக சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் பணி ஆட்கள் அனுப்புவது இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக மழை காலங்களில் கொசு உற்பத்தியுடன், நோய்த்தொற்று ஏற்படும் அவலத்தில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை படுகின்றனர். இது தொடர்பாக உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
The state of the public toilet The municipal administration that does not take notice