பாஜக - காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் - பீகாரில் பரபரப்பு.!!
bjp and congrass fight in bihar
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி "வாக்காளர் உரிமை யாத்திரை" என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகின்றனர்.
கடந்த 16-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த யாத்திரை வருகிற 1-ந்தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த யாத்திரையில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பேரணியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது ஒருவரை ஒருவர் தங்கள் கைகளில் வைத்திருந்த கட்சி கொடியை கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
bjp and congrass fight in bihar