''திமுக ஆட்சியில் தறிகெட்ட சட்டம் ஒழுங்கால் கொலைநகரான தலைநகர்''; தரமணியில் பீஹார் குடும்பம் படுகொலை குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்..!
Nainar Nagendran alleges that the capital city has become a city of murders under the DMK regime
சட்டம் ஒழுங்கைக் குழிதோண்டிப் புதைத்துள்ள திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் துளியும் பாதுகாப்பில்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது என்று தரமணியில் பீஹாரை சேர்ந்த நபர் , அவரது மணவை மற்றும் 02 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''திமுக ஆட்சியில் தறிகெட்ட சட்டம் ஒழுங்கால் கொலைநகரான தலைநகர்!
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பிஹாரைச் சேர்ந்த இளைஞரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு, அவரையும் அவர்களது 2 வயதேயான குழந்தையையும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து, சாக்குமூட்டைக்குள் அடைத்து சாலையில் வீசியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம் ஒழுங்கைக் குழிதோண்டிப் புதைத்துள்ள திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் துளியும் பாதுகாப்பில்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது. அதிலும் கல்லூரிக்குள் இப்படியொரு படுகொலையை நடத்துமளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் மிகுந்துள்ளது, ஆளும் அரசின் அப்பட்டமான தோல்வியையே கோடிட்டுக் காட்டுகிறது.
ஊடகவியலாளர் திரு. சவுக்கு சங்கரின் வீட்டை உடைத்து பொருட்களைச் சேதம் செய்து அவரின் குடும்பத்தாரிடம் எல்லை மீறத் தெரிந்த திமுகவின் ஏவல்துறைக்குத் தமிழகத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் திராணியில்லை என்பது வெட்கக்கேடு! தம் சொந்த மக்களையும், தம்மை நம்பி வருபவர்களையும் பாதுகாக்க முடியாத முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியற்றவர்.
ஊழல், போதைப்பொருள் புழக்கம், சீரழிந்த சட்டம் ஒழுங்கு என நாட்டு மக்களிடையே தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ள திமுகவின் காட்டாட்சியை அரியணையில் இருந்து தூக்கியெறியவே தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran alleges that the capital city has become a city of murders under the DMK regime