ஊழல் வழக்கு நிரூபணம்; சிறையில் உள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் மனைவிக்கு சிறை தண்டனை..!
In a corruption case the wife of the former South Korean president has been sentenced to prison
தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ. யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த போது, கிம் கியோன் ஹீ தென் கொரியாவின் முதல் பெண்பணியாக இருந்தார்.
கடந்த 2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து அவர், வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்துள்ளார். அத்துடன், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல், கடந்த ஆண்டு தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
In a corruption case the wife of the former South Korean president has been sentenced to prison