'ஜன நாயகன்' வழக்கை வாபஸ் வாங்கும் பட நிறுவனம்; நாளை இறுதி முடிவு..?
The film company is withdrawing the Jananaayagan case
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசிப்படம் 'ஜன நாயகன்'. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் ஜன நாயகன் வழக்கை விசாரிக்கிறார்.

இந்த சூழலில், 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் (KVN) நிறுவனம் நாளை (ஜனவரி 28) இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தணிக்கை வாரியத்தின் இன்றைய மேல்முறையீட்டு வழக்கில், மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
The film company is withdrawing the Jananaayagan case