'உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடிதான்; கமல் நகைச்சுவை நாயகனாகிவிட்டார்; அதிமுக செல்லூர் ராஜு..! - Seithipunal
Seithipunal


ரூ.15 லட்சத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாப்பாக்குடி ஊராட்சி மேற்கு தெருவில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணி என்கிறார். ஆனால், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், நடிகர் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசி டி.வி.யை உடைத்தார். ஊழல் அரசியலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று பேசினார். இப்போது உலகநாயகன் நகைச்சுவை நாயகனாக மாறிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி கிடையாது என்றும்,  அங்கு பில்டிங் ஸ்டிராங், அஸ்திவாரம் வீக் என்று விமர்சித்துள்ளார். அத்துடன், எங்கள் கூட்டணியில் உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடிதான் என்று கூறியதோடு, மோடி, தமிழ்மொழியை உலக அளவில் கொண்டு சேர்த்து இருக்கிறார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி கொடுத்து உள்ளேன் என்று மோடி கூறுகிறார். அது குறித்து தி.மு.க.வினர் பேச முடியுமா? என்று செல்லூர் ராஜு நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMKs Sellur Raju says that Prime Minister Modi is the true global leader


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->