'அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது; கூட்டணியில் இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் உள்பட யாரும் அழைக்கவில்லை'; ஓபிஎஸ் பேட்டி..!
Joining the AIADMK again is in God's hands says OPS in an interview
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது, அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று தவெக விஜய் கூறியுள்ளாரே..? இது தொடர்பாக விஜய் மீது அ.தி.மு.க.வினரிடமிருந்து வார்த்தை போர் நடத்தப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''கேட்டதற்கு, அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்'' என்று கூறி விட்டுச் சென்றார்.
அதன்பின்னர், சென்னையில் இருந்து மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது: ''பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கோரிக்கையாகவுள்ளது. என் கோரிக்கையும் அதுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், ''மீண்டும் அ.தி.மு.க.வில் நீங்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?'' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஆண்டவன் கையில் உள்ளது' என்று பதிலளித்துள்ளார். மேலும், கூட்டணியில் உங்களை இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் பேசினாரா? என்று கேட்ட கேள்விக்கு ''டி.டி.வி.தினகரன் உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை பேசவில்லை'' என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
English Summary
Joining the AIADMK again is in God's hands says OPS in an interview