அஜித் பவார் சென்ற விமானம் வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி உள்ளே..!
CCTV footage of the plane carrying Ajit Pawar exploding and crashing
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். நாட்டை உலுக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதிக்கு அஜித் பவார் சென்றுள்ளார். அவர் சென்ற சிறிய ரக விமானம் இன்று காலை 08.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன், அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன. அதாவது, சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் பதிவாகியுள்ளது.
English Summary
CCTV footage of the plane carrying Ajit Pawar exploding and crashing