'ஸ்பைடர்மேன்' படத்துக்கு குரல் கொடுத்த இளம் நடிகர் மரணம்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


'ஸ்பைடர்மேன்' கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து பிரபலமான மெக்சிகோ நடிகர் அலெக்சிஸ் ஒர்டேகா தனது 38-வது வயதில் கடந்த 24ம் தேதி திடீரென காலமாகியுள்ளார்;  'ஸ்பைடர்மேன்' திரைப்படங்களில் வரும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்திற்கு லத்தீன் அமெரிக்க ஸ்பானிய மொழியில் குரல் கொடுத்து உலக அளவில் பிரபலமானவர் அலெக்சிஸ் ஒர்டேகா. 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் துறையில் முக்கிய நபராக வலம் வந்துள்ளார். முக்கியமாக  'பிக் ஹீரோ 6' திரைப்படத்தில் வரும் தடாஷி ஹமாடா கதாபாத்திரம் மற்றும் 'ஸ்டார் வார்ஸ்: ரோக் ஒன்', 'ஃபைண்டிங் டோரி', 'கார்ஸ் 3' போன்ற திரைப்படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கு பிறவும் பிடித்த குரலுக்கு சொந்தக்காரரான இவரது மறைவுச் செய்தி நேற்று முன்தினம் வெளியானது.

இதனை அறிந்த இவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு குறித்து தனிப்பட்ட விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் நடக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சினிமாக்களை ஸ்பானிய மொழிக்கு கொண்டு சேர்த்த அலெக்சிஸ் ஒர்டேகாவின் பங்களிப்பைப் பாராட்டி ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The actor who lent his voice to the Spider Man film has passed away


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->