'கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 50 வீதமானோர் திருமணம் மீறிய உறவுவில் உள்ளனர்'; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் வீடியோ..!
A young womans video which has sparked controversy claims that those working in corporate companies are involved in extramarital affairs
சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் கார்ப்ரேட் நிறுவன வாழ்க்கை முறை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 50 சதவீதம் பேர் திருமணத்தை மீறிய உறவுகளில் (ரகசிய பாலியல் உறவு) வைத்துள்ளதாக சர்ச்சையாக வீடியோவில் பேசியுள்ளார்.
கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள் மிக முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக திருமணம் செய்கிறார்கள். ஒன்று குழந்தை பெற்றுக்கொள்வது, மற்றொன்று வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழந்தைகள் வேண்டுமென்றால் தத்தெடுத்துக் கொள்ளலாம், பெற்றோரை கவனிக்க வேலையாட்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த தேவைகளை மற்ற சேவைகள் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்றால், திருமணத்தின் உண்மையான அர்த்தம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில்,பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அப்பெண்ணின் கருத்தை மேலோட்டமானது, தவறான கண்ணோட்டம் கொண்டது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இன்றைய காலத்தில் நடக்கும் நவீன திருமணங்களின் வர்த்தகத் தன்மையையும், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் திருமணத்தை மீறிய உறவுகளையும் காட்டும் ‘கசப்பான உண்மை’ என்று பலர் ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கார்ப்ரேட் நிறுவன ஊழியர்கள் இந்த 50 சதவீத புள்ளிவிவரம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றும், இதுபோன்ற கருத்துகள் தங்களை தவறாக சித்தரிப்பதாகவும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
A young womans video which has sparked controversy claims that those working in corporate companies are involved in extramarital affairs