16 ஆயிரம் பேர் வேலை நீக்கம்; அமேசான் நிறுவனத்தின் நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி..!
Amazon has laid off 16000 employees
ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கியமான ஒரு தளம் அமேசான். இந்த நிறுவனம் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அமேசான் 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்துள்ளமை ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் சீனியர் துணைத் தலைவர் பெத் காலேட்டி தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு மாற்று வேலைவாய்ப்புச் சேவைகள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படுவதற்கு முன்பு நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியைத் தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Amazon has laid off 16000 employees