ஆட்சி நடத்த வக்கில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டு ராஜினாமா செய்து விடுங்கள் - CM ஸ்டாலினுக்கு அதிமுக கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin law and order
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி பீகாரில் இருந்து வந்த ஒரு குடும்பம் இன்று உயிருடன் இல்லை.
பீகாரை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அதனை தடுத்த கணவரை வெட்டி சாக்குமூடையில் கட்டி வீசிய போதை ஆசாமிகள்.
ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தையை தரையில் தூக்கி வீசி கொடூரமாக கொன்ற கும்பல்.
இது எங்கோ ஆள் நடமாட்டம் இல்லா எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற சம்பவமல்ல,
சென்னையின் மையப்பகுதியான தரமணியில் அதுவும் கல்வி வளாகத்திற்குள்.
திமுக ஆட்சியில் மருத்துவமனை வளாகங்கள் கொலைக்களமான நிலையில் தற்போது கல்வி நிலைய வளாகங்களிலும் அந்த கொடூரம் தொடரும் அவலம்.
மேடையில் நின்று வெட்டிமுழக்கமிடும் பொம்மை முதல்வரே!
உண்மையிலேயே உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பில்லை.
தயவுசெய்து நீங்கள் ஆண்டது போதும்,
மக்கள் மாண்டது போதும்..
உங்களுக்கு நிர்வாக திறமையில்லை,
ஆட்சி நடத்த வக்கில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டு ராஜினாமா செய்து விடுங்கள்.
அதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது,தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin law and order