எப்போது வேண்டுமானாலும் மொபைல் எண் மாற்றலாம்....! - UIDAI அதிரடி அறிவிப்பு
You can change your mobile number anytime UIDAI surprising announcement
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக மட்டுமல்ல, தவிர்க்க முடியாத அவசியமாகவும் மாறியுள்ளது.
அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெறுதல் முதல், வங்கி கணக்கு தொடங்குதல், பான் கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பம், செல்போன் இணைப்பு வாங்குதல் வரை, பெரும்பாலான சேவைகளின் அடிப்படை சாவியாக ஆதார் பயன்படுகிறது.

இத்தகைய சூழலில், ஆதார் தொடர்பான சேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில் UIDAI புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதார் சேவை மையங்களில் மணிநேரங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
மேலும், புதிய ஆதார் செயலி (Aadhaar App) மூலம் பயனர்கள் சில எளிய படிகளிலேயே தங்களின் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள முடியும்.
இன்றிலிருந்து இந்த வசதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது, இதனால் கோடிக்கணக்கான ஆதார் பயனாளர்கள் நேரமும் சிரமமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
English Summary
You can change your mobile number anytime UIDAI surprising announcement