பூஜ்யத்தில் இருந்து மீண்டும் தொடங்கினேன்! - பாலிவுட் அவமானங்களை பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்
I started again from scratch Rakul Preet Singh shares her Bollywood struggles
கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்-2’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென இடம் பிடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உச்சத்தைத் தொட்ட ரகுல், பின்னர் பாலிவுட்டிலும் கால்பதித்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட அவர், பாலிவுட்டில் தனது ஆரம்ப கால அனுபவங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,"தெலுங்கு சினிமாவில் நான் பெரிய நடிகையாக இருந்தாலும், பாலிவுட்டில் காலடி வைத்தபோது என்னை முழுக்க முழுக்க ஒரு புதிய முகமாகத்தான் பார்த்தார்கள். அங்கே எனது பயணம் மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கியது.
வெளியிலிருந்து வரும் நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடையாது. நடிகர்கள், இயக்குநர்களை தொடர்பு கொண்டால் போன் எடுக்க மாட்டார்கள். எடுத்தாலும் அலட்சியமாக பேசுவார்கள்.ஒரு படத்தின் ஆடிஷனுக்காக ஒரு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவமும் எனக்கு உண்டு.
அந்த நேரங்களில் மனம் உடைந்தாலும், அதுவே என்னை மேலும் வலுவாக்கியது. இந்த அனுபவங்கள்தான் என்னை மனதளவில் உறுதியாக மாற்றின” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.
English Summary
I started again from scratch Rakul Preet Singh shares her Bollywood struggles