அய்யோ, மீண்டும் அவரா..? தோல்வி உறுதி.. அலறும் உடன்பிறப்புகள்... உதயநிதி காதுக்கு சென்ற செய்தி!  - Seithipunal
Seithipunal


பாளையங்கோட்டை எம்.எல்.ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான அப்துல் வகாப் மீது எழுந்துள்ள தொடர் புகார்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சரின் ஆசி பெற்றவராக இருந்தாலும், கள நிலவரம் அவருக்கு எதிராகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

உட்கட்சிப் பூசலும் மேயர் விவகாரமும்:
அப்துல் வகாப் மீது எழுந்துள்ள 'கட்டப்பஞ்சாயத்து' புகார்களால் ஏற்கனவே அவர் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேருவின் சிபாரிசு மூலம் மீண்டும் அப்பதவியைப் பிடித்தாலும், உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தி குறையவில்லை.

மேலும், முன்னாள் மேயர் சரவணன் இவரது டார்ச்சர் தாங்காமல் ராஜினாமா செய்தது ஊரறிந்த ரகசியம். தற்போதைய மேயரும் இவருடன் ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறார்; இருவரும் ஒரே மேடையில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

ரகசிய சர்வே:
தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி தரப்பில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வேக்களின்படி, பாளையங்கோட்டை தொகுதி திமுக-விற்குச் சாதகமாக இருந்தாலும், வேட்பாளராக அப்துல் வகாப் நின்றால் தோல்வி நிச்சயம் எனத் தெரியவந்துள்ளது. அவர் சார்ந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட இவருக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவதாகத் தகவல்கள் கசிகின்றன.

உதயநிதிக்கு அழைப்பு:
NDA கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் சூழலில், இத்தொகுதியைத் தக்கவைக்கத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினே இங்குப் போட்டியிட வேண்டும் என இளைஞரணி (Youth Wing) தரப்பிலிருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளராக இருக்கும் அப்துல் வகாப்பை நேரடியாக எதிர்க்க முடியாமல், தலைமையிடம் முறையிடவே இளைஞரணி இத்தகைய நகர்வை எடுத்துள்ளது.

திமுக தலைமை இந்தத் தொகுதியில் வேட்பாளரை மாற்றுமா அல்லது 'கண்டுக்கொள்ளாமல்' விட்டுவிடுமா என்பது இனிமேல்தான் தெரியவரும் என்கிறது அறிவாலய வட்டாரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palayamkottai DMK Crisis Will Abdul Wahabs Udhay KN Nehru


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->