ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; சாலையில் 06 அடி உயரத்துக்கு படர்ந்த பனியில் சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் மீட்பு..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தோடா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்கள் என மொத்தம் 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தோடா மாவட்டத்தில் உள்ள சத்தர்காலா கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழி பொழிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,500 அடி உயரத்தில் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 40 மணி நேரம் இடைவிடாது பனி கொட்டியுள்ளது.

இதன் காரணமாக, 05 முதல் 06 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 முதல், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அதிகாரிகள் சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றியுள்ளனர்.

இந்த சூழலில், அங்கு சிக்கியிருந்த 04 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்அத்துடன், ராஜௌரி மாவட்டத்தின் கண்டி-கோத்ரங்கா பகுதியிலும் 35 கி.மீ தூரத்திற்குப் பனியை அகற்றி BRO அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர். 

இதேப்போன்று, உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்துக்குள்ளானது.  இதில், சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 04 பேர் பலியாகியுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Forty army personnel who were stranded in six foot deep snow on a road in the Doda district of Jammu and Kashmir have been rescued


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->