இந்திய அளவில் பெருமை; ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில் மதுரை கோட்டம் சாதனை..! - Seithipunal
Seithipunal


இந்தியன் ரயில்வேயில் உள்ள 19 மண்டலங்களில் 70 கோட்டங்கள் உள்ளன. இதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட கோட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஏனெனெனில், இந்தியன் ரயில்வேக்கு அதிக வருவாயை ஈட்டி தருவதில் தெற்கு ரயில்வேக்கு முக்கிய பங்குண்டு. அந்தவகையில் இந்திய அளவில் ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில் மதுரை கோட்டம் 02-ஆம் இடமும், சரக்கு ரயில்களை வேகமாக மதுரை கோட்டம் முதலிடமும் பெற்றுள்ளது. 

தெற்கு ரயில்வேயிலும் தென்மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை கோட்டம் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதிலும், அதிக வருவாயை ஈட்டி தருவதில் இந்திய அளவில் எப்போதும் சிறப்பிடம் பெற்று வருகிறது.

அதன்படி கடந்த நிதியாண்டில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரையிலான 09 மாத காலக்கட்டத்தில் மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22 ஆயிரத்து 648 விரைவு ரயில்களும் 97.05 சதவீதம் காலந்தவறாமல் இயக்கப்பட்டுள்ளன. அத்துடன், 15 ஆயிரத்து 619 முன்பதிவில்லாத ரயில்கள் 98.49 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டு அகில இந்திய அளவில் காலந்தவறாமையில் மதுரை கோட்டம் 02-ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 09 மாதங்களில் 895 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் நல்ல வருவாயை ஈட்டி தந்துள்ளன.

அத்துடன், சரக்கு ரயில்களை இயக்குவதில் மதுரை கோட்டம் தனிச்சிறப்பு கொண்டது. மணிக்கு 39.58 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அகில இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் இந்த ஆண்டும் மதுரை கோட்டம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த 09 மாதங்களில் சரக்கு போக்குவரத்தில் 2.61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21.48 சதவீதம் அதிகமாகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Madurai division continues to set records in operating trains on time at the all India level


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->