குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய விஜய்வசந்த் எம்.பி...!
MP Vijay Vasanth distributed laptops to the students of Sree Devikumari Womens College in Kuzhithurai
தமிழக அரசு சார்பில் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கிய நிலையில், சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி ஆற்றினார். அதன் பின்னர், மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்னகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
MP Vijay Vasanth distributed laptops to the students of Sree Devikumari Womens College in Kuzhithurai