பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட விஏஓ கைது.!
vao arrested for bribe in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த காக்கூர் கிராமத்தில் ஒருவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து அந்த நபர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று கிராம உதவியாளர் ராசையாவிடம் பட்ட வழங்குவது குறித்து கேட்டுள்ளார். அதற்கு ராசையா அந்த நபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத அந்த நபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் படி, போலீசார் அந்த நபரிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து கிராம உதவியாளர் ராசையாவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன் படி அந்த நபர் ராசய்யாவிடம் லஞ்சப் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
vao arrested for bribe in ramanathapuram