காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து: குடும்பத்தினர் 03 பேர் பலியானதால் சிவகங்கை அருகே சோகம்..!
3 members of a family killed in head on collision between car and bike near Sivaganga
சிவகங்கை அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 03 பேர் பலியாகியுள்ளனர். மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி கார் ஒன்று சென்ற போது, பூவந்தியில் இருந்து மதுரைக்கு பைக் ஒன்றில் 30 வயதுடைய பொன்ராஜ் என்பவர் தமது மனைவி பிரதிபா (27), குழந்தை அனுசியா (3) ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மதுரை - சிவகங்கை ரோட்டில் நாட்டார் மங்கலம் விலக்கு என்ற இடம் வந்த போது காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற பொன்ராஜ், மனைவி பிரதிபா, குழந்தை அனுசியா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
விபத்தில், உயிரிழந்த மூன்று பேரும் பூவந்தி அருகே ஏனாதியை சேர்ந்தவர்கள். பொன்ராஜ் வெளி நாட்டில் பணிபுரிந்துவிட்டு, அண்மையில் தான் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். ஒரே நாளில் குடும்பத்தினர் 03 வரும் விபத்தில் சிக்கி பலியான விவகாரம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
3 members of a family killed in head on collision between car and bike near Sivaganga