படப்பூஜையுடன் தொடங்கிய எஸ்.டி.ஆர் 49..!!
str 49 movie start with pooja
தென்னிந்திய நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை இரண்டு கட்டமாக முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ராம்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு, கயாடு லோஹர், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.
வெற்றிப்படமாக அமைந்த ‘பார்க்கிங்’ படத்துக்குப் பிறகு ராம்குமார் இயக்கவுள்ள படம் என்பதால், இதற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புள்ளது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.டி.ஆர் 49’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோரது படங்களை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
English Summary
str 49 movie start with pooja