சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அடுக்கடுக்காக கேள்வி..!
Congress spokesperson questions Modi over caste wise census
முந்தைய காலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த பாஜக தற்போது தலைகீழாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளபதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பில் மோடியின் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. இங்கே மூன்று உதாரணங்கள் மட்டுமே..
01. கடந்த ஆண்டு, ஏப்ரல் 28, 2024 அன்று, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரும் அனைவரையும் "நகர்ப்புற நக்சல்கள்" என்று அவர் முத்திரை குத்தினார்.
02. ஜூலை 20, 2021 அன்று, மோடி அரசு பாராளுமன்றத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையைக் கணக்கிட வேண்டாம் என்று கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
03. செப்டம்பர் 21, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்பிலிருந்து வேறு எந்த சாதி பற்றிய தகவல்களையும் கைவிடுவது மத்திய அரசால் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு" என்று மோடி அரசு தெளிவாகக் கூறியது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:

உண்மையில், மோடி அரசு ஓ.பி.சி.க்களுக்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டாம் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக வலியுறுத்தியது.
மோடிக்கு மூன்று கேள்விகள்:
01. கடந்த பதினொரு ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தனது கொள்கையை தனது அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள அவருக்கு நேர்மை இருக்குமா?
02. அரசாங்கத்தின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணங்களை அவர் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் விளக்குவாரா?
03. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான காலக்கெடுவை அவர் நிர்ணயிப்பாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Congress spokesperson questions Modi over caste wise census