தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்..!
Tamil director to direct Telugu actor Nagarjuna 100th film
இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவருக்கு தெலுங்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இவர் 1986-ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தற்போது நாகர்ஜுனா தனுஷுடன் இணைந்து 'குபேரா' படத்திலும், ரஜினியின் 'கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக தனது 100-வது படத்தில், கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது 100-வது படத்தை தமிழ் சினிமா இயக்குனர் ரா.கார்த்தி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்தை இயக்கியவர் ரா.கார்த்தி.. இந்த படம் 2022-ஆம் ஆண்டு இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை ரா.கார்த்தி இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil director to direct Telugu actor Nagarjuna 100th film