சென்னையில் பலத்த காற்று, மழையின் எதிரொலி; பிரபல திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..!
Due to strong winds and rains in Chennai the roof of a famous cinema collapsed and caused an accident
சென்னையில் இன்று பிற்பகலில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த்து.இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.
திரையரங்கு உள்ளே சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது அங்கிருந்து ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட்டுள்ளனர்.
இவ்வாறு ரசிகர்கள் வெளியேற்றப்பட்டபிறகு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈவிபி பிலிம் சிட்டி அருகே உள்ள ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Due to strong winds and rains in Chennai the roof of a famous cinema collapsed and caused an accident