10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 200 மார்க்; எல்லா பாடங்களிலும் தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்..!
200 marks out of 600 in Class 10 public exam Parents celebrate by cutting cake for son who failed in all subjects
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோழ்வியடைந்த மாணவனுக்கு பெற்றோர்கள் கேக் வெட்டி கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், சமீபத்தில், அவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார். சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலை, எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600-க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

இவ்வாறு அபிஷேக் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகும், அவரது பெற்றோர் அபிஷேக் சோழச்சகுடாவுக்கு எதுவும் சொல்லவில்லை. அத்துடன், அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் போது கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக்கை வெட்டினார்.
அப்போது அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை என்றும், நீ மீண்டும் முயற்சி செய்யலாம் எனவும், வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறி அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும், 'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
English Summary
200 marks out of 600 in Class 10 public exam Parents celebrate by cutting cake for son who failed in all subjects