கோடை வெயிலில் சருமத்தை காக்கும் முல்தானி மெட்டி - எப்படி பயன்படுத்துவது?
multhanimitti face pack
கோடைகாலத்தில், வெயில் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். இந்த வெயில் சருமத்தின் நிறத்தையும், அதன் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கிறது. இதனை தடுக்க முல்தானி மிட்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர்:- முல்தானி மிட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து
பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இது சருமத்தை குளிர்வித்து எரிச்சலைக் குறைக்கிறது.
* முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்: முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை சம அளவு கலந்து தோலில் தடவி வந்தால், வெயிலினால் ஏற்படும் வீக்கம் மற்றும் அரிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானி மிட்டி மற்றும் தயிர்: முல்தானி மிட்டி மற்றும் தயிரை கலந்து பேஸ்ட் செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது சருமத்தை மென்மையாக்குவதுடன் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.