நற்செய்தி! எனது புதிய பயணத்தின் மகிழ்ச்சியை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்...! - கமல்ஹாசன்
Good news shared joy my new journey with my friend Rajinikanth Kamal Haasan
வருகிற 25 -ம் தேதி,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ''கமல் ஹாசன்'' மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார்.இதைத்தொடர்ந்து ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இதுகுறித்து கமல் ஹாசன் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது," புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்.
மகிழ்ந்தேன்" எனப் பதிவிட்டு, படங்களையும் பதிவிட்டுள்ளார்.மேலும், 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது.
மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது.
அவ்வகையில் இந்த ஒரு இடத்தை வழங்கியது.
English Summary
Good news shared joy my new journey with my friend Rajinikanth Kamal Haasan