பரபரப்பு! 20 நிபந்தனைகளுடன் காவலர்கள் அனுமதி...! - நாகையில் விஜய் பிரசாரம்
Excitement Policemen allowed with 20 conditions Vijay campaign in Nagai
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் 'விஜய்' தனது 2 -ம் கட்ட அரசியல் பிரசாரத்தை இன்று (சனிக்கிழமை) நாகையில் தொடங்கினார். திருச்சியில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த அவர், காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து பிரசார வாகனத்தில் நாகை, திருவாரூர் நோக்கி பயணம் மேற்கொண்டார்.

நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், அண்ணாசிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடத்தினார்.மேலும், பாதுகாப்பு காரணமாக, காவலர்கள் 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக, 35 நிமிடங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், விஜய் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
நாகையில் பிரசாரத்தை முடித்த விஜய், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூரில் மாலை 3 முதல் 5 மணி வரை பிரசாரம் மேற்கொண்டு, பின்னர் சென்னைக்கு புறப்பட உள்ளார்.
English Summary
Excitement Policemen allowed with 20 conditions Vijay campaign in Nagai