சோகம்.. சுடுகஞ்சி ஊற்றி 3 வயது குழந்தை பலி.!!
three years old baby died in chengalpat
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் அடுத்த சின்ன வெண்மணி கிராமம் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மூன்றரை வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தக் குழந்தை கடந்த 11-ந்தேதி வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு உலை பாத்திரத்தை குழந்தை பிடித்து இழுத்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக தீபிகாவின் மீது சுடுகஞ்சி கொட்டியதால் குழந்தை
வலியால் அலறி துடித்துள்ளது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை தீபிகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three years old baby died in chengalpat