நான் என்றும் மீனவர்கள் நண்பன் - நாகையில் தவெக தலைவர் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில், எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க... என்று தொண்டர்களை நலம் விசாரித்து விட்டு  தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன். அண்ணா, பெரியார் இருவருக்கும் வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இப்ப நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா... எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம். மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம்.

என்றும் மீனவர்கள் நண்பன் நான். மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை.

நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் புரட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர். மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது. இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk leader vijay speech in nagai district


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->