இளைஞர்கள் 'கூல் லிப்' பயன்படுத்துவது மிகவும் ஆபத்து; புற்றுநோய் மைய இயக்குநர் எச்சரிக்கை..!
The director of the cancer center warns that it is very dangerous for young people to use Cool Lip
மனிதர்களுக்கிடையில் மாறிவரும் வாழ்வியல் முறைகளே புற்றுநோய் பாதிப்புகள் உலக அளவில் அதிகரித்து வருவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும், இந்தியாவில், இளைஞர்களிடையே பரவி வரும் 'கூல் லிப்' (Cool Lip) பயன்பாடு (போதைக்காக எடுத்துக்கொள்வது) குறித்து அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கூல் லிப்பிலும் உள்ளதால், அது நேரடியாக ரத்தத்தில் கலந்து சிகரெட்டை விடத் தீவிரமான புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுவதாக கல்பனா தெரிவித்துள்ளார். அதாவது, குணமாகாத வாய்ப்புண் மற்றும் தொடர் இருமல், இரண்டு வாரங்களுக்கு மேலான செரிமானப் பாதிப்பு, மலம் கழிப்பதில் திடீர் மாற்றங்கள் போன்றவை தென்பட்டால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும், அடையாறு புற்றுநோய் புற்றுநோய் மைய இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், புற்றுநோயைத் தடுக்கத் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக, வீட்டில் சமைத்த காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சூழல் மாசு மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைத் தவிர்ப்பதே புற்றுநோயைத் தடுப்பதற்கான முதல் கேடயம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The director of the cancer center warns that it is very dangerous for young people to use Cool Lip