தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் வென்ற இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத்..! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் -மலேசியாவின் ஜின் வெய் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில், சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-8 என முதல் செட்டை வென்றார். அடுத்தாக, 02-வது செட்டில் 06-03 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது மலேசியா வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். 

இதன் காரணமாக தேவிகா சிஹாத் முதல் முறையாக தாய்லாந்து மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோருக்கு பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் 03வது இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு தேவிகா சிஹாத் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devika Sihag wins the championship at the Thailand Masters Badminton tournament


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->